முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகலாந்தில் 2-ம் உலகப் போர்க் கால குண்டு வெடித்தது

நாகலாந்தில் இரண்டாம் உலக போர்க் கால குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
கோப்புப்படம்
பகிர்:

நாகலாந்தில் இரண்டாம் உலக போர்க் கால குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் (மண்டலம் 1) நயிம் முஸ்தபா கூறுகையில்,

நாகாலாந்தின் திமாபூர் மாவட்ட பர்மா முகாம் பகுதியில் இரும்புப் பொருள் என நினைத்து சுத்தியலால் தட்டியதில் குண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெடித்து சிதறிய பொருளை ஆராய்ந்ததில் அது இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பில் அவரின் வீடு ஒரு பகுதி இடிந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.