முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக உணவுத்துறை அமைச்சருக்கு கரோனா

கர்நாடக மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் கோபாலையாவிற்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 4:17 PM
கர்நாடக மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் கோபாலையா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

கர்நாடக மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் கோபாலையாவிற்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய்க்கு இன்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் கோபாலையாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோபாலையா வெளியிட்ட சுட்டுரையில், கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன், இருப்பினும் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை.

Advertisement

மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கூறினார்.

இதுவரை, கர்நாடகத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்பட 13 அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.