முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 1.17 லட்சம் பேர் விமானத்தில் பயணம்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்ககம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்ககம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பிற்கு பின் இந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் நாடு முழுவதும் 1.16 லட்சம் பயணிகள் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

அதில், வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து 1,16,848 லட்சம் பயணிகள் 1,376 விமானங்கள் முலம் இந்திய விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மேலும், இந்திய விமான நிலையங்களில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்குள் 1,383 விமானங்கள் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதன்மூலம் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மொத்தம் 2,759 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.