முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜாகியா இனாம் காலமானார்

மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான ஜாகியா இனாம் (வயது 71 ) திங்கள்கிழமை காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான ஜாகியா இனாம்
பகிர்:

மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான ஜாகியா இனாம் (வயது 71 ) திங்கள்கிழமை காலமானார்.

ராஜஸ்தான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை மாலை மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இரவு உயிரிழந்தார்.

ஜாகியா டோங்க் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இவரது மறைவிற்கு, முதல்வர் அசோக் கெஹ்லோட், பி.சி.சி தலைவர் கோவிந்த் டோட்டாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்வான ஒரே பெண் ஜாகிய என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.