முகப்பு
தற்போதைய செய்திகள்

பிகாரில் 4வது திருமணத்திற்கு தடையாக இருந்த மகன் கொலை

பிகாரில் நான்காவது திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து ஒரு பெண் கொலை செய்தார்.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 7:16 PM
கோப்புப்படம்
பகிர்:

பிகாரில் நான்காவது திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து ஒரு பெண் கொலை செய்தார்.

பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தர்மசீலா தேவி (வயது 23) வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பார்வையற்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவரைப் பிரிந்து வேறொருவரை திருமணம் செய்தார். அவர் திடீரென்று உயிரிழந்ததால், மகேஷ் செளதிரி என்பவரை மணந்தார். அவரும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

Advertisement

இதையடுத்து, நான்காவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்த  தேவி, தனது 4 வயது மகனை அருகில் உள்ள குளத்து நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், முதல் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை கைது செய்து விசாரித்ததில், தேவி குற்றத்தை ஒப்புக்கொண்டார் என காவல் அதிகாரி அமரேந்திர குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.