முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா பலி: பிரான்சில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பிரான்சில் பலியானவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2020 at 9:04 AM
கோப்புப் படம்
பகிர்:


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பிரான்சில் பலியானவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 9 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றுக்கு  உலகம் முழுவதும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 689-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 2 ஆயிரத்து 142 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 
  
நோய்த்தொற்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் நோய்த்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக பிரான்சில் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் இந்த நோய்த்தொற்றின் தீவிரத்தை உணராமல், பாதுகாப்பின்றி வெளியில் சுற்றி வருவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.