முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் 3,746, கர்நாடகத்தில் 5,872 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

Updated On : 21 அக்டோபர், 2020 at 9:00 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 3,746 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 7,93,299 ஆக உயர்ந்துள்ளது. இதில் 32,376 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7,54,415 பேர் குணமடைந்துள்ளனர், 6,508 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

கர்நாடகம்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,872 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 88 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 7,82,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,71,618 பேர் குணமடைந்துள்ளனர், 10,696 பேர் பலியாகியுள்ளனர். 1,00,440 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.