தற்போதைய செய்திகள்

அசாமிற்கு வரும் மும்பை, கர்நாடக பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்

ANI

அசாம் மாநிலத்திற்கு விமானம் மூலம் வரும் மும்பை மற்றும் கர்நாடக மாநில பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலம் உள்பட நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தியில்,

அசாம் மாநிலத்திற்கு விமானம் மூலம் வரும் மும்பை மற்றும் கர்நாடக மாநில பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும். முன்பே கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தாலும், மீண்டும் பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அசாமில் தற்போதைக்கு இரவுநேர ஊரடங்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT