அதிகரிக்கும் கரோனா: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை
சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிகபட்சமாக சென்னையில் நாளொன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கரோனா பரவலை தடுப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 15 மண்டலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.