ஹா்ஷல் படேல் மிரட்டல்: பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு 
தற்போதைய செய்திகள்

ஹா்ஷல் படேல் மிரட்டல்: பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு

ஐபிஎல் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் மும்பை இண்டியன்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது.

DIN


சென்னை: ஐபிஎல் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் மும்பை இண்டியன்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியுடன் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் லின் களமிறங்கினார்கள்.

முதல் இரண்டு ஓவர்களில் பொறுமையாக விளையாடிய ரோஹித், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்து அதிரடிக்கு திரும்பிய நிலையில் 19(15) ரன்களில் கோலியின் ரன் அவுட்டால் ஆட்டமிழந்தார்.  

அடுத்து கிறிஸ் லினுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.

அரை சதம் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடி ஜேமிசன் பந்தில் சூர்யகுமார் 31(23), சுந்தர் பந்தில் லின் 49(35) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.  

பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார்கள்.

ஆனால் ஹா்ஷல் படேல் பந்தில் ஹார்திக் 13, இஷான் 28 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தார்கள்.  

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் போலார்டுடன் ஜோடி சேர்ந்த குர்னல் பாண்டியா 7 ரன்களில் ஹா்ஷல் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே போலார்டும் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஹாட்ரிக் சாதனை படைக்க வீசப்பட்ட கடைசி ஓவரின் 3வது பந்து ரன் ஏதும் எடுக்கப்படாத நிலையில் 4வது பந்தில் மாா்கோ ஜென்சென் போல்டானார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 159 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

பெங்களூர் அணி சார்பில் ஹா்ஷல் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுகதான்: ஆா்.பி. உதயகுமாா்

பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை!

SCROLL FOR NEXT