மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 51 கோடி வசூல்
மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 51.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 51.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி முதல் நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. நாட்டில் அதிகபட்சமாக மும்பையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனை குறைக்கும் வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், முகக்கவசம் அணியாத 25,53,546 பேரிடமிருந்து கடந்தாண்டு ஏப்ரல் 20 முதல் அபராதமாக ரூ. 51.46 கோடி மும்பை மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.