ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ. 500 அபராதம்: ரயில்வே துறை
ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டு, மீறுவோர்களிடம் அனைத்து மாநிலங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.