தற்போதைய செய்திகள்

ஐபிஎல்: ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 151 ரன்கள் இலக்கு

DIN

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் 150 ரன்கள் எடுத்தது.

14-வது ஐபிஎல் சீசனின் 9-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித், டி காக் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள், அரைசதம் கடந்து ஆடியபோது ரோஹித் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய சூர்யகுமார்(10), இஷான்(12) சிறிது நேரத்தில் அவுட்டாகினர்.சற்று தாக்குப்பிடித்த டி காக் 40 ரன்களில் ஆட்டமிழக்க 13.5 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து களமிறங்கிய போலார்டு சற்று நிதானமாக ஆடிய நிலையில், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் அவுட்டானார்.

கடைசி ஓவரில் போலார்டு 2 சிக்ஸர்கள் அடித்ததால் மும்பை அணியில் ஸ்கோர் 150ஆக உயர்ந்தது.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 150 ரன்கள் எடுத்தது.

இறுதி வரை களத்தில் நின்ற போலர்டு 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT