முகப்பு
தற்போதைய செய்திகள்

காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவியதையடுத்து மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மளிகை, காய்கறி, பழக்கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டில்,

காய்கறி, பழம், மளிகை கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து வகையான உணவுக் கடைகளும் காலை 7 மணிமுதல் 11 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →