தற்போதைய செய்திகள்

நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவால் 22 பேர் பலி: மோடி இரங்கல்

DIN


மகாராஷ்டிரத்தின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.   

இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாசிக்கசிவு ஏற்பட்டு டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், கரோனா நோயாளிகளுக்கு சரிவர ஆக்ஸிஜன் வழங்கமுடியாததால், அங்குள்ள 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

“நாசிக் மருத்துவமனையில் வாயுக் கசிவால் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT