கரோனா நிலைமை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதையடுத்து, கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.