முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 23 ஏப்ரல், 2021 at 2:06 PM
பிரதமா் மோடி
பகிர்:

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்ப்பது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இதற்குமுன் கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.