ஹரியாணாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையில் மூத்த அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், ஹரியாணாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். அதற்கான பதிவு ஏப்ரல் 28 முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் ஹரியாணா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.