முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 39,047 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 39,047 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கர்நாடகத்தில் புதிதாக 39,047 பேருக்கு கரோனா
பகிர்:


கர்நாடகத்தில் புதிதாக 39,047 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதிதாக 39,047 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,822 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 22.70 சதவிகிதமாக உள்ளது.

மேலும் 11,833 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 229 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 10,95,883 பேர் குணமடைந்துள்ளனர். 15,036 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 3,28,884 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.