கரோனாவுடன் போராடும் இந்தியாவுக்கு ஒத்துழைப்போம்: தென் கொரியா
கரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தந்து ஒத்துழைப்போம் என தென் கொரியா தூதரகம் தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தந்து ஒத்துழைப்போம் என தென் கொரியா தூதரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3.60 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,293 போ் உயிரிழந்துள்ளனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை தென் கொரியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
கரோனா தொற்றை எதிர்கொண்டு உயிர்களை காப்பாற்றும் வகையில் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருள்களை தென் கொரியா அரசு வழங்க உள்ளது. ஆக்ஸிஜன் போன்ற தேவைப்படும் பொருள்கள் குறித்து இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு எங்களது அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.