முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பிப்.10 முதல் கல்லூரிகள் திறப்பு

ஒடிசாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 3:54 PM
பகிர்:

ஒடிசாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் திறக்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.