முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் நீக்கம்

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவை, கர்நாடக அதிமுக செயலாளர் எம்.பி.யுவராஜ் நேரில் சந்திக்க சென்றதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் இன்று முதல் எம்.பி.யுவராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →