தற்போதைய செய்திகள்

மார்ச் 12-ல் ஆந்திர மாநகராட்சிகளுக்கு தேர்தல்

DIN

ஆந்திரத்தின் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 10ஆம் தேதியும், வாக்கெண்ணிக்கை மார்ச் 14ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் வெளியிட்ட செய்தியில்,

கரோனாவிக்கு பின் நிலைமை சீரடைந்துள்ளதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல் தற்போது நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான வாக்குப் பதிவுகள் மார்ச் 10 ஆம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் நடைபெறாத தொகுதிகளுக்கு மார்ச் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கெண்ணிக்கை மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்.

ஆந்திரத்தில் விஜயநகரம், எலுரு, மச்சிலிபட்னம், குண்டூர், ஓங்கோல், திருப்பதி, சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர், விசாகப்பட்டினம் பெருமாநகராட்சி மற்றும் விஜயவாடா பெருமாநகராட்சி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT