கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு
கேரள மாநிலத்திலிருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்திலிருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் சுமார் 5,000 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கர்நாடகத்தில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கேரள பயணிகள் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து கரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2 வாரங்களில் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் கரோனா சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.