கேரளத்தில் 4 ஆயிரத்தை கடந்த கரோனா பலி
கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,937 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,937 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 4,937 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 10,11,957ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5,439 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 9,46,910ஆக உள்ளது. தற்போது 60,760 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.