கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தம்மம்பட்டியில் தரமற்ற தார்ச்சாலை: உதவி எண் 1100க்கு குவியும் புகார்கள்

தம்மம்பட்டியில் தரமற்ற தார்ச்சாலை போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் உதவி மையத்திற்கு தம்மம்பட்டியைச்  சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் தரமற்ற தார்ச்சாலை போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் உதவி மையத்திற்கு தம்மம்பட்டியைச்  சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் கள்ளிப்பாதை,குரும்பர்த்தெரு,முஸ்லீம்தெரு என ஒரு கிலோ மீட்டர் தூர தார்ச்சாலை, ரூ.50 லட்சம் செலவில் டிச.3ஆம் தேதி முதல், தார்ச்சாலை போடுவதற்குரிய ஆயத்தப்பணிகள் துவங்கி, அண்மைக்காலம் வரை போடப்பட்டு நிறைவுபெற்றது.

இதில் குரும்பர்த்தெருவில் போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் தரமற்றதாகவும், தார் மிகவும் குறைவாகவும் போடப்பட்டுள்ளது. குரும்பர்த்தெரு சாலை மிகவும் மோசமானதாகவும், லேசான மழை பெய்தாலே, முழுவதும் பெயர்ந்துவிடும் அளவிற்கு உள்ளது.

மேலும் அது லேசான தார்ச்சாலையாக தரமற்று போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தமிழக முதல்வர்  அண்மையில் துவக்கிவைத்த முதல்வரின் உதவி மைய எண்ணான 1100 என்பதை அழைத்து, தரமற்ற தார்ச்சாலை போடப்பட்டுள்ளதாக  கடந்த சில நாள்களில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தரமற்ற சாலை போடப்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரருக்கு, அச்சாலைக்குரிய நிதியை வழங்கினால், ஒப்புதல் வழங்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் சிக்கல் எழும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT