முகப்பு
தற்போதைய செய்திகள்

மார்ச் 1-ல் கூடுகிறது பஞ்சாப் பட்ஜெட் கூட்டத்தொடர்

பஞ்சாப் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
மார்ச் 1-ல் கூடுகிறது பஞ்சாப் பட்ஜெட் கூட்டத்தொடர்
பகிர்:

பஞ்சாப் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது, 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் மார்ச் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →