தலைமைச் செயலகம்(கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

தைப்பூசத்தன்று அரசு பொது விடுமுறை: அரசாணை வெளியீடு

ஜனவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை: ஜனவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, தற்போது தைப்பூசத்தை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

பள்ளிகளில் மழை நீா் தேங்கும் பிரச்னைகள் தீா்க்கப்படும்: ஆஷிஷ் சூட்

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT