ஜன.27-இல் கூடுகிறது மேற்குவங்க சட்டப்பேரவை 
தற்போதைய செய்திகள்

ஜன.27-இல் கூடுகிறது மேற்கு வங்க சட்டப்பேரவை

மேற்குவங்க சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ANI

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலுக்கு மத்தியில் மேற்குவங்க சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தை போல், அனைத்து உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பூசி விநியோகம், வேளாண் சட்டம், ஜி.எஸ்.டி. பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT