தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திங்கள்கிழமை மக்களின் இயல்புவாழ்ககையில் பாதிப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழைப் பொழி ஏற்பட்டு வந்தது.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 33 மி.மீட்டரும், தலைஞாயிறில் 11.8 மி.மீட்டரும் மழை பதிவானது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடர்ந்த கனமழை தொடர்ந்து வருகிறது. காலை 8 மணி முதல் 6 மணிவரையில் வேதாரண்யத்தில் 127.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 80 .5 மி.மீட்டரும் மழை பதிவானது.

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சாகுபடி வயல்களில் தண்ணீர் வடியாது இருந்த நிலையில் தற்போது கொட்டி தீர்த்து வரும் மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகாராஜபுரம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தகட்டூர், மருதூர், தென்னடார் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரக உள்ள நெல் வயல்களை வெள்ள நீர் சூழ்நது, கதிர்களை பாதிக்கச்செய்துள்ளது.

நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து வருகிறது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்ததால் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் பொருள்களை வாங்கச்செல்வது பாதிக்கப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT