முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் 238 பறவைகள் பலி

மகாராஷ்டிரத்தில் மேலும் 238 பறவைகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
மகாராஷ்டிரத்தில் 238 பறவைகள் பலி
பகிர்:

மகாராஷ்டிரத்தில் மேலும் 238 பறவைகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் பார்பனி, பீட், லாத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலால் இதுவரை 1858 பறவைகள் பலியாகியுள்ளன. 

இந்நிலையில் இன்று மாநில கால்நடைத்துறை வெளியிட்ட செய்தியில்,

மாநிலத்தில் 238 பறவைகள் கடந்த  24 மணிநேரத்தில் பலியாகியுள்ளன. உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் மொத்தம் 2096 பறவைகள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →