தற்போதைய செய்திகள்

தில்லி மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 938 கோடி ஒதுக்கீடு: மாநில அமைச்சர்

ANI


புது தில்லி: தில்லி மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 938  கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

வடக்கு, தெற்கு மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த 4-5 மாதங்களாகவும், கிழக்கு தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த 3 மாதங்களாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை. மாநகராட்சிகளின் முன்னாள் ஊழியா்களுக்கு கடந்த பல மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 

இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக தில்லியில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 938  கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது,

தில்லி அரசின் பல்வேறு துறைகளில் செலவினத்தை குறைந்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 938 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT