முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கன் குண்டு வெடிப்பில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 11 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
ஆப்கனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 11 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.

உருஸ்கான் மாகாணத்தின் தாரின்கோட் நகரில் செவ்வாய்க்கிழமை மதியம் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள், 9 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பானது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.