தற்போதைய செய்திகள்

வாட்ஸ் ஆப்பை விட பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானது

புதிய வாட்ஸ்ஆப் தரவு பகிர்வுக் கொள்கையை ஒப்பிடும் போது பேஸ்புக் மெசஞ்சர் மிகவும் ஆபத்தானது என்று சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜாக் டாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

DIN

புதிய வாட்ஸ்ஆப் தரவு பகிர்வுக் கொள்கையை ஒப்பிடும் போது பேஸ்புக் மெசஞ்சர் மிகவும் ஆபத்தானது என்று சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜாக் டாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

புதிய வாட்ஸ்ஆப்பின் தரவு பகிர்வுக் கொள்கை குறித்த விவாதிக்கும் அதே வேளையில், பயனர்கள் கவலைப்பட வேண்டிய மற்றொரு செயலி பேஸ்புக் தயாரிப்பான மெசஞ்சர். 

ஏனெனில், இந்த செயலியில் எந்தவொரு இறுதி முதல் இறுதி (எண்ட் - எண்ட்) பாதுகாப்பை வழங்கவில்லை. மேலும் தரவு மீறலுக்கு அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் மெசஞ்சர் பயனர்கள் முதலில் பாதுகாப்பான செயலிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜாக் டாஃப்மேன் கூறியிருப்பதாவது,

மெசஞ்சர் செயலியில் எந்தவொரு தரவு பாதுகாப்பும் செய்யப்படவில்லை. ஆகையால், தற்போது வாட்ஸ்ஆப் கொள்கை பிரச்னைக்கு பின் பாதுகாப்பான செயலி வேண்டுமென்று மெசன்ஞ்சரை தேர்ந்தெடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.

வாட்ஸ்ஆப்பில் இருக்கும் இறுதி முதல் இறுதி பாதுகாப்பு முறை மெசஞ்சரில் நீங்கள் தேர்வு செய்தால் மட்டுமே செயல்படும். அந்த பாதுகாப்பும், இரண்டு பேரின் உரையாடலுக்கு மட்டுமே தவிர குழுவிற்கு இல்லை.

உலகளவில் 130 கோடிக்கும் அதிகமான மெசஞ்சர் பயனர்கள் உள்ளனர், மேலும் 2021 ஆம் ஆண்டில் பேஸ்புக் மெசஞ்சர் 240 கோடி பயனர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் மெசஞ்சரில் மாதந்தோறும் 2000 கோடிக்கும் அதிகமான செய்திகள் வணிகத்திற்கும், பயனர்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஆகையால் பாதுகாப்பான செயலிகளுக்கு மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கனவெங்கும் தித்தித்தாய்... ஸ்வாசிகா!

டிட்வா புயல்: சென்னையில் தொடர் மழை! கடல்போல் காட்சியளிக்கும் சாலைகள்!

மழை, வெள்ள பாதிப்புக்கு விரைவில் நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT