ஒடிசாவில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு 
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு

ஒடிசாவில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ANI

ஒடிசாவில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து நிகழவாண்டிற்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்திற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் ஒடிசா அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

கரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நாள்களுக்கான  கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT