வங்கதேசம், நேபாளத்திற்கு தடுப்பூசி வழங்கியது இந்தியா
இந்தியாவில் இருந்து வங்கதேசம், நேபாளத்திற்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் அந்நாடுகளுக்கு சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வங்கதேசம், நேபாளத்திற்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் அந்நாடுகளுக்கு சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் வங்கதேசம் மற்றும் நேபாளத்திற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பூசிகள் வியாழக்கிழமை சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன், புதன்கிழமை பூடான் மற்றும் மாலத்தீவுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.