முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் 33.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 33.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
கரோனா தடுப்பூசி
பகிர்:

நாட்டில் இதுவரை 33.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 4,40,681 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் 4,40,681 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 33,68,734 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 3,07,752 பேருக்கு, ராஜஸ்தானில் 2,73,866 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 97,126 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →