கர்நாடகம்: மே 24 முதல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
கர்நாடக மாநிலத்தில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மே 24 முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மே 24 முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகள் திறப்பை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வெளிட்டுள்ள செய்தியில்,
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 24 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.