பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751 கோடி ஒதுக்கீடு
பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751.05 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751.05 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நிதியிலிருந்து, 2020ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751.05 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் அசாம் மாநிலத்திற்கு ரூ. 437.15 கோடி, அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.75.86 கோடி, ஒடிசாவிற்கு ரூ. 320.94 கோடி, தெலங்கானாவிற்கு ரூ. 245.96 கோடி மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 386.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.