தற்போதைய செய்திகள்

சந்திரபாடி - சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

DIN



தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவர் கிராமத்தில் சுருக்கு மடி வலை பயன்படுத்தகோரி மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்திரபாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்துவரும் சுருக்குவலை தடை செய்யப்பட்ட தொழில் என்று கூறி தடை செய்ய நினைக்கும் தமிழக மீன்வளத் துறை மீன்வளத் துறை அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

பிற கிராமங்களில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களின் தூண்டுதலின் பெயரில் சுருக்குவலை தொழிலையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் நசுக்க நினைக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் உண்மையை கண்டிக்கிறோம்.

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 -இன்படி அனைத்து வகையான மீன் பிடித்த தொழில்களையும் முறை ஏற்படுத்த வேண்டும் மற்றும் அந்த தொழில்களில் உள்ள சட்ட விதி மீறல்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இன்படி 21 வகையான சட்டத்தையும் உடனே அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT