கரூர்: அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு.
கரூர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்(53). அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் இவர் அதிமுக ஆட்சியில் 2015 முதல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்தபோது வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி டெண்டரை விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கோடிக்கணக்கில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு திரண்டுள்ள அதிமுகவினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சாயப்பட்டறைகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும், சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றனர். சோதனையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையையொட்டி கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.