கர்நாடகத்தில் 1,370 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு
கர்நாடகத்தில் மொத்தம் 1,370 பேருக்கு கருப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 1,370 பேருக்கு கருப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
மொத்தம் 1,370 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,292 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 51 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.