தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை(ஜூன் 2) பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து மாநில அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுகள்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.