முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 124 வயது மூதாட்டி

நாடு முழுவதும் பலர் தடுப்பூசி போட மறுத்து வரும் நிலையில், 124 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

நாடு முழுவதும் பலர் தடுப்பூசி போட மறுத்து வரும் நிலையில், 124 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வீடு வீடாக சென்று முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு வீட்டில் 124 வயதுடைய ரெஹ்தி பேகம் என்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய நிலையில், அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உலகத்திலேயே அதிக நாள் வாழ்ந்து வரும் மூதாட்டி என்ற உண்மை வெளிவந்துள்ளது.

கின்னஸ் புத்தகத்தின் படி, ஜப்பானிய பெண் கேன் தனகா என்பவர் தான் 118 வயதில் வாழும் மிகப் பழமையான நபர் ஆவார். இதுவரை வாழ்ந்த மிகப் பழமையான நபராக ஜீன் லூயிஸ் கால்மென்ட் என்பவர் உள்ளார். அவர் தனது 122 வயது மற்றும் 164 நாட்களில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அந்த மூதாட்டியின் வயதை உறுதிபடுத்தற்கான அதிகாரப்பூர்வ சான்றான வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற எதுவும் இல்லை. 

ரேஷன் அட்டையை அடிப்படையில் அவரது வயது 124ஆக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →