முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஆந்திர மாநிலத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திரத்தில் கடந்த மே 5 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டித்து சில தளர்வுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →