முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 52% பேருக்கு தடுப்பூசி

அமெரிக்காவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 ஜூன், 2021 at 3:50 PM
பகிர்:

அமெரிக்காவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,

நாடு முழுவதும் இதுவரை 30.1 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 63.5 சதவீதம் பேர் குறைந்தது முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.

Advertisement

65 வயதுக்கு மேற்பட்ட 86.3 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.5 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 52 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், சுதந்திர தினமான ஜூலை 4க்கு முன்பு 45 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.