கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மம்தாவுடன் பாஜக துணைத் தலைவர் முகுல் ராய் சந்திப்பு

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் முதல்வர் மம்தாவை சந்திக்கவுள்ளார்.

DIN

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் முதல்வர் மம்தாவை சந்திக்கவுள்ளார்.

திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், தற்போது மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து பாஜகவின் துணைத் தலைவராக உள்ள முகுல் ராய் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் திரிணமூல் காங்கிரஸின் இணையவுள்ளார் என சமீபகாலமாக தகவல் வெளியாகின.

அந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் கட்சி அலுவலகத்திற்கு தற்போது முகுல் ராய் வந்துள்ளார். இது மேற்குவங்க அரசியலில் பெரும் எதிர்பார்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT