தற்போதைய செய்திகள்

திரிணமூலுக்கு திரும்பிய பாஜக துணைத் தலைவர் முகுல் ராய்

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

ANI

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைய உள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முன்னிலையில் முகுல் ராய் மற்றும் அவரது மகன் மீண்டும் இணைந்தனர்.

இந்நிகழ்வில் பேசிய மம்தா, முகுல் ராயை நாங்கள் வரவேற்கிறோம். கட்சியில் அவர் முக்கிய பங்கு வகிக்கவுள்ளார் எனத் தெரிவித்தார்.

முகுல் ராய் மீண்டும் திரிணமூல் இணைந்தது மேற்கு வங்க அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

பகடைக்காயாகும் உக்ரைன்!

காக்க உதவுமா காப்பீடுகள்?

வரலாறு மன்னிக்காது!

SCROLL FOR NEXT