தற்போதைய செய்திகள்

உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

DIN

பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக உத்தரகண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

இந்த வார ஓடிடி படங்கள்!

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

SCROLL FOR NEXT