தற்போதைய செய்திகள்

தில்லி தீ விபத்து: 5 கடைகள் எரிந்து சேதம்

DIN

தில்லியில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து 4 கடைகளுக்கு பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை குறைந்த காரணத்தால் கடந்த வாரம் முதல் தில்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லி சென்ட்ரல் மார்க்கெட்டின் லாஜ்பட் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் கூறியது,

தீ விபத்து குறித்து காலை 10.20 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 30 வாகனங்களில் 100 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவுவதற்கு முன்பு அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT